politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்.
ச.சா - அமெரிக்கப் பொருளாதாரத்த தூக்கி நிறுத்த நம்ம தலைல கை வைக்கப் போறாங்களோ..??
 

மத்திய அமைச்சர் தோமர் :- வெங்காய விலை உயர்ந்து வருகிறது.
ச.சா - அதுதான் மக்களுக்குத் தெரியுமே.. என்ன செய்யப் போறீங்கன்னு சொல்லுங்க..!!
 

மத்திய அமைச்சர் அமித்ஷா :- நாடு முழுவதும் 90 லட்சம் தனியார் பாதுகாவல் ஊழியர்கள் உள்ளனர்.
ச.சா - மக்களின் உடைமைகள் எப்போதும் ஆபத்துல இருக்குறதக் காட்டுதோ..??
 

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஜி.லதா :- கணினிவழித் தேர்வு மிகவும் பாதுகாப்பானது.
ச.சா - கம்மல் கூடப் போடக்கூடாதுன்னு விரட்டுன நீட் தேர்வுல ஆள்மாறாட்டமே பண்ணிட்டாங்களே..??

;